Hotel Management Catering Technology Course by TAHDCO : Perambalur Collector Info!

பெரம்பலூர் கலெக்டர் கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் டெக்னாலஜி இன்ஸ்ட்யூட்டில் மூன்று வருட முழு நேர பட்டப்படிப்பு மற்றும் பட்டடியப்படிப்பு சேர்ந்து படித்திட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னை தரமணியிலுள்ள இன்ஸ்டியூட் ஆப் ஹோட்டல் மேனஜ்மெண்ட் கேட்டரிங் டெக்னாலஜி & அப்ளைடு நியூட் நிறுவனமானாது ஐஎஸ்ஓ 9001 2015 தரச்சான்று பெற்ற, ஒன்றிய அரசின் சுற்றுலா துறையின் கீழ் அமைய பெற்ற ஒரு தன்னாட்சி நிறுவனம், மேலும் இந்நிறுவனம் சர்வதேச அங்கீகாரம் பெற்றது. அமெரிக்கன் கவுன்சில் ஆப் பிசினஸ் ஆல் அங்கீகரிக்கப்பட்டது. பிரான்சில் நாட்டில் உள்ள லைசி நிகோலஸ் அப்பர்ட் கேட்டரிங் நிறுவனத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. ஹோட்டல் மேனஜ்மெண்ட் சர்வே 2022-இன்படி உலகளாவிய மனித வள மேம்பாட்டு மையத்தில் 2-வது இடம் பெற்றுள்ளது. சிஇஓ வேர்ல்டு நடத்திய உலகளவில் சிறந்த விருந்தோம்பல் மற்றும் ஹோட்டல் மேலாண்மை பள்ளிகளில் உலக தர வரிசையில் 13-வது இடம் பெற்றுள்ளது.

இப்புகழ் பெற்ற நிறுவனத்தில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவருக்கு பி.எஸ்.சி ஹாஸ்பிட்டாலி & ஹோட்டல் நிர்வாகம் 3 வருட முழு நேர பட்டபடிப்பு, ஒன்றரை ஆண்டு முழுநேர உணவு தயாரிப்பு பட்டடியப்படிப்பு, மேலும் பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ஒன்றரை ஆண்டுகள் உணவு தயாரிப்பு மற்றும் பதனிடுதல் கைவினஞர் படிப்பில் சேர்ந்து படித்திடவும், படிப்பு முடிந்தவுடன் நட்சத்திர விடுதிகள், விமானம் நிறுவனம், கப்பல் நிறுவனம், சேவை நிறுவனங்கள் மற்றும் உயர் தர உணவகங்கள் போன்ற இடங்களில் வேலை வாய்ப்பும் பெற்றுத் தரப்படும்.

இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும். பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் 45 சதவீதம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ.3.00 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். பி.எஸ்.சி 3 வருட முழு நேர பட்டபடிப்பு பயில நேசனல் டெஸ்ட் ஏஜன்சி மூலம் நடத்தப்படும் நேசனல் கவுன்சில் பார் ஹோட்டல் மேனஜ்மெண்ட் ஜாயிண்ட் எக்சாமில் இல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி தாட்கோ மூலம் சென்னையில் வழங்கப்படும். (2023-2024 ஆம் ஆண்டிற்கு தேர்விற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 27.04.2023 இப்படிப்பிற்கான செலவீனம் தாட்கோவால் ஏற்கப்படும்.

ஆரம்ப கால மாத ஊதியமாக ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை பதவி உயர்வின் அடிப்படையில் மாத ஊதியமாக பெறலாம். எனவே, இத்திட்டத்தில் பதிவு செய்வதற்கு தகுதியுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!