hall-ticketமுதன்மைக் கல்வி அலுவலர் க.முனுசாமி விடுத்ததுள்ள தகவல் :

நடைபெற உள்ள ஜுன் ஜீலை 2016 மேல்நிலைத் தேர்வெழுத அரசுத் தேர்வு துறையால் அறிவிக்கப்பட்ட நாட்களில் விண்ணப்பித்த அனைத்து தனித் தேர்வுகளும் (தட்கல் உட்பட) 16.06.2016 (வியாழன்கிழமை) முதல் 18.06.2016 (சனிக்கிழமை) வரை www.tngdc.gov.in, என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இக்கால அவகாசம் முடிவுற்ற பின்னர் தேர்வுக் கூட நுழைவுச் சீட்டின் பதிவிறக்கம் செய்து கொள்ள இயலாது.

எனவே, தேர்வுகள் இவ் வாய்ப்பினை பயன்படுத்தி மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டினை தவறாது பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும். http://www.tngdc.gov.in என்ற இணைய தளத்திற்கு சென்று DEPARTMENT OF EXAMINATION ONLINE APPLICATON என்பதை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் HSE Hall Ticket Download என்பதை கிளிக் செய்து தங்களது மார்ச் 2016 பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை (Date of Birth) பதிவு செய்தால் அவர்களுடைய தேர்வுக் கூட அனுமதிச் சீட்டு திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை அடங்கிய பாடங்களில் செய்முறைத் தேர்வில் 40 மதிப்பெண்களுக்குக் குறைவாக பெற்று தேர்ச்சி அடையாதவர்கள் கண்டிப்பாக செய்முறைத் தேர்வினை மீண்டும் செய்வதோடு எழுத்துத் தேர்விற்கு வருகை புரிய வேண்டும். அதிகபட்ச மதிப்பெண் 200 கொண்ட செய்முறை மட்டும் உள்ள பாடத்தில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் செய்முறைத் தேர்விற்கு வருகை தரவேண்டும்.

மொழிப் பாடங்களில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு சிறப்பு மொழி (தமிழ்) பாடத்தில் கேட்டல், பேசுதல் திறன் தேர்வு செய்முறைத் தேர்விற்கான தேதி குறித்த விவரத்தை தனித் தேர்வுகள் தாம் தேர்வெழுதும் தேர்வு மையத்தின் முதன்மைக் கண்காணிப்பபாளரை அணுகி அறிந்து கொள்ளவேண்டும். உரிய தேர்வுக்கூட அனுமதிச் சீட்டின்றி எந்த ஒரு தேர்வுரும் தேர்வெழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள், என இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!