hundi theft at Mariamman temple! Perambalur police are investigating!
பெரம்பலூர் அருகே உள்ள கீழக்கணவாய் கிராமத்தில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த உண்டியலை நேற்றிரவு மர்ம நபர்கள் தூக்கி சென்றுவிட்டனர். அதில் சுமார் ரூ. 50 ஆயிரம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த பெரம்பலூர் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த ஆண்டும், இதே போல் அக்கோயில் உண்டியல் திருடு போனது என்பது குறிப்பிடத்தக்கது.