பெரம்பலூர்: நடைபெற இருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையிலும், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், கல்லூரி மாணவ, மாணவிகளின் ஒத்துழைப்புடன் மனித சங்கிலி, வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம், வாக்காளர் விழிப்புணர்வு மாரத்தான் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்ப்படுத்தும் வகையில் தனலெட்சுமி கல்லூரி வளாகத்தில் “நூறு சதவீதம் நேர்மையுடன் வாக்களிக்கப்போம்;” என்பதை உணர்த்தும் வகையில் 150 அடி நீளத்திற்கு வரையப்பட்டடிருந்த ரங்கோலி கோலத்தைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவிகள் வருவாய் கோட்டாட்சியர் ரா.பேபி தலைமையில், தனலட்சுமி கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் முன்னிலையிலும் இன்று வாக்காளர் உறுதிமொழி எடுத்தனர்.
அதனை தொடர்ந்து வருவாய் கோட்டாட்சியர் பேசியதாவது:
சமூகத்திலுள்ள 18 வயது நிரம்பிய அனைவரும் எவ்வித வேறுபாடும் இல்லாமல் தேர;தலில் வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் நமக்கு வழங்கியுள்ளது. எனவே நாம் அவைரும் நமது உரிமையை விட்டுக்கொடுக்காமல் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். மேலும் தங்கள் பகுதிகளிலுள்ள அனைத்து மக்களும் எவ்வித தடைகளும் இன்றி, நேர்மையுடன் வாக்களிக்க வேண்டும் என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும், என இவ்வாறு பேசினார்.
அதனை தொடர்ந்து தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த 50 அடி நீள பதாகையில் வருவாய் கோட்டாட்சியர், மாணவ, மாணவிகள், கல்லூரி முதல்வர்கள், மற்றும் பேராசிரியர்கள் உள்பட பலர் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த கையெழுத்து பிரச்சாரப்பலகையில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்ச்சியில் சீனிவாசன் பொறியியல் கல்லூரி, தனலெட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தனலெட்சுமி சீனிவாசன் இன்ஸ்ட்டியூட் ஆஃப் ரிசர்ச் அன்ட் டெக்னாலஜி கல்லூரி மாணவர்கள் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டாட்சியர்கள் சிவா, தமிழ்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.