20160227_145312தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து போராடி வருகிறார்கள். தமிழ்நாடு முழுவதும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் என, மொத்தம் 14,549 பேர் பணியமர்த்தப்பட்டனர்.

அப்போது அவர்களுக்கு மாதம் தொகுப்பூதியமாக 5ஆயிரம் வழங்கப்பட்டது. பிறகு இரு வருடங்கள் கழித்து 2 ஆயிரம் ரூபாய் சம்பளம் உயர்த்தப்பட்டு தற்போது மாதம் 7 ஆயிரம் சம்பளத்தில் வேலை செய்கிறார்கள். பணியில் சேர்ந்து 4 வருடங்கள் ஆகியும் பணி நிரந்தரம் செய்யாத காரணத்தால் அரசிடம் கோரிக்கை வைத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை என போராட்டத்தில் குதித்தனர்.

அதன் ஒரு பகுதியாக இன்று தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறார்கள். பணி நிரந்தரம் , சம்பளம் உயர்வு ஆகியவை பிரதானமான கோரிக்கைகளாகும். பெரம்பலூர் ஆட்சியர் அலுவலக முன்பு நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!