பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பெண்ணை தரக்குறைவாக பேசிய கணவன் மனைவியை போலீசார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், பூலாம்பாடி அருகே உள்ள கடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஈஸ்வரமூர்த்தியின் மனைவி அன்னபூரணி (45),
அதே ஊரைச் சேர்ந்த கோபி(42), இவரது மனைவி சிவகாமி(37). அன்னபூரணி வயலும் கோபி வயலும் அருகருகே உள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் இடையே நிலம் தொடர்பாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இதில் கோபியும், சிவகாமியும் அன்னபூரணியை தகதா வார்த்தைகளால் திட்டி தாக்கியதாக கூறி அரும்பாவூர் காவல் நிலையத்தில் அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கோபியையும் அவரது மனைவி சிவகாமியையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.