Husband and wife to contest independently for the same ward of Perambalur municipality!

நடக்க உள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தலில், பெரம்பலூர் நகராட்சியின் வார்டு உறுப்பினளுக்கு போட்டி போட்டுக் கொண்டு, அரசியல் கட்சிகள், சுயேட்சைகள் வேட்பு தாக்கல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று நகராட்சியில், கணவன் மனைவியான சுரேஷ் (41) – இளமதி (32) இருவரும் ஒன்றாக வந்து 20 வார்டுக்கு சுயேட்சையாக போட்டியிட வேட்பு தாக்கல் செய்தனர். இதை அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சயர்த்தை ஏற்படுத்தியது.

இது குறித்து வேட்பாளர் சுரேஷ் தெரிவித்தாவது: நான் பெரம்பலூர் மாவட்ட திமுக நெசவாளர் அணியின் துணை அமைப்பாளராகவும், ஒருங்கிணைந்த 11 வார்டு திமுக பிரதிநிதியாக இருந்து திமுக கட்சிப் பணிகளை செய்து வந்தேன்.

உள்ளாட்சி தேர்தலில் பெரம்பலூர் நகராட்சியில் 20 வார்டுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் நம்பி, கடந்த 50 நாட்களாக பிரச்சாரம் செய்துவிட்டேன்.

தற்போது கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதால், நானும், எனது மனைவியும் சுயேட்சையாக போட்டியிடுகிறோம். எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாச உள்ளதோடு, வார்டு மக்களின் நல்ஆதரவு இருப்பதால் இந்த முடிவு எடுத்திருப்பதாக தெரிவித்த அவர், பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரனுக்கு ஒரு மாதம் கட்சி பணிகளில் இருந்து தனக்கு விடுப்பு அளிக்க வேண்டும் என கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

பெரம்பலூர் மாவட்டத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி கட்சியில் இருந்து தனித்து போட்டியிடும் நிலையில், அக்கட்சியை சேர்ந்தவரே தனியாக சுயேட்சையாக நிற்பது பொதுமக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!