Husband quarrels over drinking; Woman commits suicide by jumping into well in Kurumbalur!
பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் பாளையத்தை சேர்ந்த ராஜசிதம்பரம் மகன் கவுதம் என்பவருக்கு சொந்தமான வயல்காட்டில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில், பெண் சடலம் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு, தீயணைப்பு மீட்பு படையினருடன் சென்று கிணற்றில் கிடந்த சடலத்தை, மீட்டு, பிரேத பரிசோதனைக்கு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் நடத்திய விசாரணையில், கிணற்றில் இன்று மாலை 3 மணி அளவில், தற்கொலை செய்து கொண்டது பாளையத்தை சேர்ந்த செந்தில்முருகன் (32) என்பவரது மனைவி செல்வம் என்பது தெரியவந்தது.
செல்வத்தின் கணவர் செந்தில்முருகன் கூலி வேலை செய்து வருகிறார், இவர்களுக்கு ரிஷாந்த் (7) என்ற மகனும், கவிகா (4) என்ற மகளும் உள்ளனர், செந்தில்முருகன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வருவதால் குடிக்க வேண்டாம் என்று செல்வம் பல முறை கூறி நிலையில், இருவருக்கும் இன்று வழக்கம் போல், தகராறு ஏற்பட்டுள்ளது, மனமுடைந்த செல்வம் வீட்டில் இருந்து வெளியேறி தற்கொலை செய்து கொணடது விசாரணையில் தெரியவந்துள்ளது.
கணவனின் குடிபோதையால் மனைவி, 2 குழந்தைகளை தவிக்க விட்டு தற்கொலை செய்து கொண்ட அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.