In the presence of the MP A Raja, DMK backup, joined about 100 people from the party.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் வடக்கு ஒன்றியம், வடக்கலூர் ஊராட்சியில் அ.தி.மு.க.- தே.மு.தி.க. – பா.ஜ.க. ஆகிய கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் நூறுக்கும் மேற்பட்டோர் இனைந்தனர்.
பெரம்பலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள நடந்த நிகழ்ச்சியில், வேப்பூர் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன் தலைமையில், வடக்கலூரில் இருந்து அ.தி.மு.க மற்றும் தே.மு.தி.க.- பா.ஜ.க. ஆகிய கட்சிகளில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் விலகி, முன்னாள் மத்திய அமைச்சர்- கழக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ. இராசா எம்.பி. முன்னிலையில், வழக்கறிஞர் தங்கராஜ்,பொறியாளர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் தி.மு.க.வில் இனைந்தனர். அனைவருக்கும் ஆ.இராசா எம்.பி.பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதில் மாவட்ட செயலாளர், குன்னம் சி. இராஜேந்திரன் , மாநில ஆதிதிராவிடர் நலக் குழு துணை அமைப்பாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவரணி துனை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என். ராஜேந்திரன், வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், நகரச்செயலாளர் எம். பிரபாகரன், மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக் மற்றும் எஸ்.மதியழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.