I spend my hard earned money; Others take your tax money and spend it on you. Parivendar, the candidate who collected votes for the lotus symbol, spoke!

கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணராயபுரம் கிழக்கு ஒன்றியத்தில் இன்று மாலை 6 மணியளவில் கொசூரில் தனது பிரச்சாரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் பாரிவேந்தர் தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அதைத்தொடர்ந்து காக்காயம்பட்டி நான்கு ரோடு,பஞ்சப்பட்டி, வேங்காம்பட்டி, புனவாசிபட்டி, இறுதியாக லாலாபேட்டை கடைவீதியில் வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசியதாவது; நான் இந்த தொகுதியில் நின்று 6, லட்சத்து 85 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றேன்.

வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றதற்கு பிறகு பல தரப்பினரிடையே பேசக்கூடிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

நான் எனது தொகுதி வளர்ச்சி நிதி கொரோனா காலத்தை தவிர்த்து ரூபாய் 17 கோடி கிடைத்தது.

அதையெல்லாம் கல்விக்கூடங்கள்,சுற்றுச்சுவர்,உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு முறையாக செலவு செய்துள்ளேன்.

அதுமட்டுமின்றி ஆயிரத்து 200 மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 118 கோடியில் உயர்கல்வி வழங்கியுள்ளேன். என்னை வெற்றி பெறச் செய்தால்

இந்த ஆண்டு ஆயிரத்து 500 ஏழை குடும்பங்களுக்கு ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளேன்.

தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியாவிலேயே செய்த செலவுகளை புத்தகமாக வெளியிட்ட ஒரே பாராளுமன்ற உறுப்பினர் என்னை தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

எனவே மக்களுக்காக தனது, சொந்த பணத்தை செலவு செய்கிற எனக்கு தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

இந்த தொகுதியில் எனது சொந்த செலவில் ரூபாய் 118 கோடியில் 1400 மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்கியுள்ளேன்.

நான் மக்களுக்கு கொடுக்க வந்து இருக்கிறேன். மக்களிடத்தில் வாங்க வரவில்லை.வேட்பாளர்களில் சிறந்த வேட்பாளர் யார் என நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.

நான் ஒரு ரூபாய் செலவு செய்தாலும் என்னுடைய சொந்த உழைப்பில் சம்பாதித்த பணத்தை செலவு செய்கிறேன்.

ஆனால் மற்றவர்கள் உங்கள் வரிப் பணத்தை எடுத்து உங்களுக்கு செலவு செய்கிறார்கள்.என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும், என பேசினார்.

பிரச்சாரத்தின் போது தொகுதி பொறுப்பாளர் நெல்லை ஜீவா, மாநில பொதுச்செயலாளர் ஜெயசீலன், கரூர் மாவட்ட தலைவர் பிரகாஷ் கண்ணா, மாவட்ட செயலாளர் தோகைமலை பிச்சை,

மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியை சேர்ந்த பாஜக, பாமக, மற்றும் ஐஜேகே நிர்வாகிகள், முன்னோடிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மேளதாளங்கள் முழங்க நிர்வாகிகள் சார்பு அணிவித்தும் பெண்கள் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!