I will bring all the Scheme’s announced by Amma: Promise of AIADMK MP candidate Chandramohan who won votes in Perambalur!

பெரம்பலூர் எம்.பி தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும், சந்திமோகன் அதிமுக, தேமுதிக, புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறைமங்கலத்தில் அதிமுக பெரம்பலூர் மாவட்ட செயலாளர் இளம்பை. இரா. தமிழ்ச்செல்வன், முன்னாள் அமைச்சர் மோகன் ஆகியோர் தலைமையில் வாக்குகள் சேகரித்தார்.

மருத்துவ ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு, மகளிருக்கு தாலிக்கு தங்கம், பணிபுரியும் மகளிருக்கு மானியத்தில் ஸ்கூட்டர், அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா சிமெண்ட், முடங்கி கிடந்த கொரோனா காலத்தில் மக்களுக்கு உதவிய கட்சி, பொங்கல் பரிசு,

சத்துணவு திட்டம், பள்ளியில் சீருடையுடன், காலணி, மாணவர்களுக்கு மடிக்கணனி, பிரசவித்த தாய்மார்களுக்கு அம்மா பெட்டகம், என பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தவர், தாய்மார்களுக்கு உழைக்கும் கட்சி அதிமுக, எனவே தாய்மார்களே, பெரியோர்களே அதிமுக சார்பில் போட்டியிடும் எனக்கு வாக்களித்து அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் வேட்பாளர் சந்திமோகன் கேட்டுக் கொண்டார்.

முன்னாள் எம்.பி மருதைராஜா, சந்திரகாசி, அதிமுக பொறுப்பபாளர்கள் ராணி, லட்சுமி, ராஜேஸ்வரி, முன்னாள் எம்.எல்.ஏ பூவை.செழியன், ஒன்றிய செயலாளர்கள், கர்ணன், சிவப்பிரகாசம், ரவிச்சந்திரன், நகர செயலாளர் ஆர்.ராஜபூபதி, அதிமுக நகராட்சி கவுன்சிலர் பழனிசாமி, ஆலத்தூர் ஒன்றிய செயலாளர் கேசிபி, எசனை பன்னீர்செல்வம், மற்றும் நத்தக்காடு பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பெரம்பலூர் ஆலத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட விஜயகோபாலபுரம், நாரணமங்கலம், ஆலத்தூர்கேட், திருவளக்குறிச்சி, பாடாலூர், கூத்தனூர், நாட்டார்மங்கலம், குரூர், மங்கூன், புது விராலிப்பட்டி, புது அம்மாபாளையம், நக்கசேலம் அடைக்கம்பட்டி எலந்தலைப்பட்டி, து.களத்தூர் கண்ணப்பாடி, நத்தகாடு, தேனூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர் சந்திரமோகன், முன்னாள் அமைச்சர் மோகன், பெரம்பலூர் அதிமுக மாவட்ட செயலாளர் இளம்பை. இரா.தமிழ்ச்செல்வன், நகர செயலாளர் ராஜபூபதி உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினருடன் வாக்குகள் சேகரித்தார்.

வாக்கு சேகரிக்க சென்ற பகுதிகளில், பெண்கள் ஆரத்தி எடுத்தும், ஆண்கள் பட்டாசு வெடித்தும் வரவேற்றனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!