I will work to solve any basic problems of weavers – Perambalur MP candidate Parivendar promises!
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் தாமரை சின்னத்தில் இந்திய ஜனநாயக கட்சி நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். நேற்று புலிவலம், மூவானுர், கோமங்கலம், அய்யம்பாளையம், ஜெம்புநாதபுரம், திருத்தலையூர், நல்லியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
வேனில் பிரச்சாரம் செய்த ஐ.ஜே.கே கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் பிரச்சாரத்தில் பேசியதாவது, விவசாயிகள் வாழ்வு மேம்படவும், இடுபொருள்கள் விவசாய தளவாட பொருட்கள், மானிய விலையில் கிடைக்கவும், உரிய நிதியினை பெற்று உதவி செய்வேன். நெசவாளர்களின் அடிப்படை பிரச்சனைகள் எதுவாயினும் பெரம்பலூரில் உள்ள அலுவலகத்தில் தெரிவியுங்கள். அதற்கான நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் போக்க பாடுபடுவேன்.
பெரம்பலூர் நாடாளுமன்ற எம்.பி ஆக என்னை தேர்வு செய்தால் 1,500 குடும்பத்தினருக்கு உயர்தர சிகிச்சை வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். தற்போது தொடரும் கல்வி சேவையும் தொடர்ந்து செயல்படுத்துவேன். எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, மாநிலச் செயலாளர் ஏ.கே.டி.வரதராஜன், மாவட்ட தலைவர் கருணாகரன், மாவட்ட செயலாளர் தண்டபாணி, ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, பாலகுமார், பாரதிய ஜனதா மாவட்ட தலைவர் அஞ்சாநெஞ்சன், முசிறி மேற்கு மண்டல தலைவர் முருகேசன், மண்டல பொதுச்செயலாளரும், துலையாத்தம் ஊராட்சி மன்ற தலைவருமான பழனிச்சாமி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.