தனியார் ஹோட்டல் இட்லியில் ஸ்டாப்ளர் பின் கிடந்தது குறித்து கலெகரிடம் புகார் அளிக்கப்பட்டது.
மக்கள் நீதிப் பேரவை அமைப்பின் மாநில அமைப்பாளராக இருப்பவர் ஆதிதமிழ்ச் செல்வன். இவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் நந்தகுமாரிடம் அளித்துள்ள புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது :
நான் கடந்த 19ம் தேதி திருச்சிக்குச் சென்று விட்டு பெரம்பலூர் திரும்பும் போது, இரவு உணவுக் காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இட்லி பார்சல் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு சென்றேன். வீட்டில் அதை சாப்பிட்ட போது இட்லியில் ஸ்டாப்ளர் பின் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
இது குறித்து ஹோட்டலில் சென்று கேட்ட போது அவர்கள் தகாத வார்த் தைகளால் திட்டினர். இது பற்றி மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கும் தகவல் தெரிவித்தேன்.
இது குறித்து விசாரணை நடத்தி, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.