Idol smuggling near Perambalur; 2 arrested!
பெரம்பலூர் அருகே உள்ள செங்குணம் கிராமத்தைச் சேர்ந்த கணேஷ்ராஜா (54), இவரது நண்பரான அதே ஊரை சேர்ந்த ராமகிருஷ்ணன்(45), ஆகிய 2 பேரையும் திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று மதியம் 30 பேர் கொண்ட படை கைது செய்ததாக கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட கணேசின் வீட்டிலிருந்து சுமார் 3 அடி உயரமுள்ள 1200 ஆண்டுகள் பழமை வாய்ந்த 2 சிலைகள் மற்றும் ஒரு ஸ்கார்பியோ கார், பல்சர் பைக் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.