If Congress comes to power, NEET will be cancelled; Chidambaram Constituency Candidate Thol Thirumavalavan confirmed in the campaign!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுகுடல், கீழப்புலியூர், வேப்பூர், பெண்ணகோணம், நமையூர், நன்னை உட்பட பல்வேறு கிராமங்களில் சிதம்பரம் லோக்சபா தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தொல்.திருமாவளவன் ஓட்டு சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில் திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாஜ மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவிற்கு மிகப்பெரிய பேராபத்து ஏற்படும். மத்திய பாஜ ஆட்சியில் விலைவாசி உயர்த்தப்பட்டுள்ளது, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, வேலையின்மை நிலவுகிறது. மக்களுக்கும், விவசாயிகளுக்கான விரோத கொள்கைகளை வகுத்து பாஜ செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரேசன் கடைகள் இருக்கும், 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தி தரப்படும். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் அரசியலமைப்புச் சட்டம் பாதுகாக்கப்படும், பெட்ரோல்,டீசல், சமையல் கேஸ் விலை குறைக்கப்படும். பெண்களின் வாழ்க்கைத் தரம் உயரும் என தெரிவித்தார்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் சிவசங்கர், யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, விசி மண்டல செயலாளர் கிட்டு, முன்னாள் எம்எல்ஏ துரைசாமி, திமுக மாவட்ட துணை செயலாளர் சன்சம்பத், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், ராஜேந்திரன், விசி மாவட்ட செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலாளர் வரதராசன், சிறுகுடல் கரிகாலன், விசிக மாவட்ட செய்தி தொடர்பாளர் உதயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.