If DMK comes to power, a women’s court for the district: Kanimozhi MP in the election campaign. Promise!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூரில், குன்னம் தொகுதி வேட்பாளர் எஸ்.எஸ். சிவசங்கர் மற்றும் பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் ம.பிரபாகரனை ஆதரித்து இன்று காலை எம்.பி. கனிமொழி பிரச்சாரத்தில் ஈடுபட்டு பொதுமக்களிடம் வாக்குகளை சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டலம், அரசு மருத்துவக்கல்லூரி திட்டம் உடனடியாக கொண்டு வரப்படும், வாலிகண்டபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்த்தப்படும், கீழப்புலியூரில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வரப்படும். செங்குணம் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் கட்டப்படும், தேசிய நெடுஞ்சாலையில் அதிகளவில் விபத்துக்கள் நடைபெறுவதால் 24 மணி நேர மருத்துவமனை அமைக்கப்படும், தி.மு.க.ஆட்சி அமைந்தவுடன் முதியோர் உதவித் தொகை ரூ.1500 என்று உயர்த்தி வழங்கப்படும், 100 வேலை திட்டத்தில் சம்பளம் உயர்த்தி வழங்கப்படும், தளபதி பதவியேற்றவுடன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும், காலியாக உள்ள 3.5 லட்சம் பணிகளுக்கு தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். பிஜேபி -யின் பினாமி ஆட்சியாக எடப்பாடி அரசு செயல்படுகிறது. அவருக்கு தோல்வி பயம் வந்து சாபம் விட்டு வருகிறார். வெற்றி நடை போடும் தமிழகம் என்ற பெயரில் நிறைய விளம்பரம் செய்யப்படுகிறர். அதோடு, எடப்பாடியின் சம்பந்தி வீட்டார்கள் கோடி கணக்கில் கான்டிராக்ட் எடுத்து வருமானம் பார்த்து வருகின்றனர். அமைச்சர்களும் இதே போல் வருமானம் பார்த்து வருகின்றனர். இந்த ஆட்சியில், பெண்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை, உயர் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்து காவல் துறையில் உரிய நடவடிக்கை இல்லை. திமுக ஆட்சிக்கு வந்த உடன் மாவட்டந்தோறும் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு என தனி நீதிமன்றம் அமைத்து வழக்குகள் விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த இரண்டு வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என அவர் பேசினார். மேலும் தி.மு.க.ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்டங்ஙளை பட்டியலிட்டு பேசினார். மாவட்ட கழகச் செயலாளர் குன்னம் சி. இராஜேந்திரன், மாநில நிர்வாகிகள் பா. துரைசாமி, டாக்டர் செ.வல்லபன், எஸ்.பெரியசாமி, பொறியாளர் ப.பரமேஷ்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் கி.முகுந்தன், பட்டுச்செல்விராஜேந்திரன், வேப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தி.மதியழகன், வேப்பூர் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் சி.ராஜேந்திரன், கீழப்புலியூர் ஊராட்சி தலைவர் சாந்தி செல்வராஜ் உள்ளிட்ட கட்சி மற்றும் கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், விசிக உள்ளிட்ட நிர்வாகிகள், மகளிர் அமைப்புகள் திரளாக கலந்து கொண்டனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!