If electric fence is erected, agricultural electricity disconnection, Rs. 10 thousand fine, 3 years imprisonment; Electricity Board Notice!

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் பாதுகாப்பு குறித்து மாதம் இருமுறை திங்கட்கிழமைகளில் மக்களைத் தேடி மின் விழிப்புணர்வு முகாம் வரும் திங்கட்கிழமை முதல் நடைபெறவுள்ளது. மின் விழிப்புணர்வு முகாமில் மின் நுகர்வோருக்கு மின்பாதுகாப்பு குறித்து விளக்கமும், மழைக்காலங்களில் மின் சாதனங்களை பாதுகாப்புடன் பயன்படுத்துவது, மக்கள் தன்னிச்சையாக மின் கட்டமைப்பில் வேலை செய்வதை தவிர்ப்பது தொடர்பாகவும், மின்சாதனங்களை பாதுகாப்புடன் பயன்படுத்த பாதுகாப்பு கருவிகள் அமைப்பது தொடர்பாகவும், மின்வாரிய அலுவலர்கள் மற்றும் பணியாளர்களால் தெளிவாக எடுத்துரைக்கப் படும். மேலும் மழைக் காலங்களில் மின் கட்டமைப்பில் ஏற்படும் மின் பழுது மின் கம்பிகள் அறுந்து விழுதல் போன்றவற்றை உரிய பிரிவு அலுவலகங்களில் பொதுமக்கள் தெரியப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. ஸ்டே கம்பிகளில் கால்நடைகளை கட்டாமல் இருக்கவும் பொது மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், விவசாயிகள் தங்கள் நிலங்களில் அனுமதியின்றி அமைக்கப்படும் மின்வேலி சட்ட விரோதமானது. இதனால் மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு ஏற்படும் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. எனவே, சட்ட விரோதமாக வயலில் மின்வேலி அமைக்கும் நபருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது. மேலும், சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்படும் வயல்களில் உள்ள விவசாய மின் இணைப்பும், நிரந்தரமாக துண்டிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!