If he wins again in Perambalur constituency, the family will get Rs. Action for 10 lakh worth of higher medical treatment: Parivendar, who filed the nomination, interviewed!
பெரம்பலூரில் நேற்று, பெரம்பலூர் எம்.பி தொகுதிக்கான வேட்பாளராக பிஜேபி சார்பில் ஐஜேகே கட்சி நிறுவனர் பாரிவேந்தர் இன்று கூட்டணி கட்சியினருடன் வேட்பு மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட நான், கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பான்மைவற்றை நிறைவேற்றி உள்ளேன். அதில், ரயில் திட்டம் உள்ளிட்டம் பாதியில் கிடப்பில் உள்ளது. ஏற்கனவே அறிவித்தப்படி ஆண்டுக்கு 1500 பேருக்கு இலவச கல்வியை வழங்கி உள்ளேன். மேலும், மீண்டும் வெற்றி பெற்றால் அத்திட்டம் தொடரும்,
மேலும், இந்த முறை வெற்றிபெற்றால் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தனது தொகுதிக்குட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1800 குடும்பங்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க உள்ளதாகவும் அதற்காக நாங்களே ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10 லட்ச ரூபாய் காப்பீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். 3 மாதங்களுக்கு ஒரு முறை மருத்துவ சோதனை ஊர்ஊராக நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். வெங்காயம், வாழை போன்ற விவசாய விலை பொருட்களை வைத்திருந்து நல்ல விலை வரும் போது விற்க குளிர்பதன கிடங்கு அமைக்கப்படும்.
மேலும் 3வது முறையாக மோடிதான் பிரதமராக வருவார் என தெரிவித்த அவர் மத்திய அரசிடம் எனக்குள்ள தனிப்பட்ட பழக்கத்தில் நான் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன் என தெரிவித்தார்.
இங்கிருந்து மற்ற கட்சிகளை சேர்ந்த 40 எம்பிக்கள் சென்றாலும் யாரையும் அவ்வளவு எளிதாக சந்திக்க முடியாது என தெரிவித்தார். கடந்த முறை விட்டுப்போன வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.கடந்த முறை போலவே ஒரு சட்டமன்றத்கொதிக்கு 300 மாணவர்கள் வீதம் இம்முறையும் தனது சொந்த செலவில் இலவச கல்வி அளிக்கப்படும் என பாரிவேந்தர் தெரிவித்தார்.
மேலும் பெரம்பலூர் நகருக்கு ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பதோடு இப்பகுதியில் விளையும் சின்ன வெங்காயத்தை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
தான் தேசியவாதி என்றும், பிரிவினையை விரும்புவதில்லை என்றும் தெரிவித்தவர், பாராளுமன்றத்திற்குள் வீண் கோசங்கள் எழுப்புவது, ஒத்தி வைக்க குரல் எழுப்புவது தனக்கு பிடிக்காது. நான் கல்வியாளர் என்ற முறையில் பொதுமக்களுக்கு இன்றைக்கு அத்தியவசிமாக, கல்வி, மருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பேன். அவர் செய்த 5 ஆண்டு சாதனைகள் புத்தகமாக தொகுக்கப்பட்டு வெளியிட்டுள்ளதாக தெரிவித்தார்.
விவசாயம், நீர்பாசன மேலாண்மை பணிகளும் செய்வதாகவும், செய்திருப்பதாகவும் தெரிவித்தார்.
வேட்பு மனு தாக்கலின் போது, ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, பாஜக கோட்டப் பொறுப்பாளர் சிவசுப்பிரமணியன், பாரிவேந்தர் உதவியாளர் அருணாச்சலம், மற்றும் ஓபிஎஸ் அணி மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ஆர்.டி.ராமசந்திரன், அமமுக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், பாமக மாவட்ட செயலாளர் செந்தில்குமார், ஐஜேகே மாநில விளம்பர பிரிவு பொறுப்பாளர் முத்தமிழ்செல்வன், புதிய தமிழகம், உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உள்பட ஆண்கள், பெண்கள் என ஆயிரக்கணக்கானோர், வேட்பு தாக்கல் செய்யும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன்பு திரண்டு மேளதாளத்துடன் வரவேற்றனர்.