If Rajini knew that social enemies were in the protest, they should give their report to the police: Thirumavalavan
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அளித்த பேட்டி:
திமுக முக்கியமான பிரச்சினைகள் குறித்து சட்டமன்றத்தில் பேச அனுமதிக்காததால் அவைகளை புறக்கணித்து போட்டி சட்டசபை நடத்துவது போராட்ட வடிவம் என்பதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக பேரவை புறக்கணிப்பை வரவேற்கிறது .
நாடு முழுதும் இன்றைய இடைத்தேர்தல்.முடிவுகள் பாஜக மீதான வெறுப்பை காட்டியுள்ளது . சமூக விரோதிகள் போராட்டத்தில் இருந்தது ரஜினிக்கு தெரியுமென்றால் அவர்கள் யார் ? என்ன விபரம் என காவல்துறையிடம் வழங்க வேண்டும் .
தூத்துக்குடி போராட்டத்தில் தமிழக அரசு கேட்காமலே துணை ராணுவத்தை அனுப்ப மத்திய அரசு தயாராக இருப்பதாக தெரிவித்தது , மத்திய அரசின் ஆதரவோடே தூத்துக்குடி சம்பவம் நடைபெற்றதை உணர்த்துகிறது என திருப்பூரில் நேற்று கட்சி பிரமுகர் படத்திறப்பு விழாவில் கலந்து கொண்ட அவர் இவ்வாறு தெரிவித்தார்.