If the BJP comes back to power, they will change it to one country, one ruling party; Tamil Nadu Transport Minister Sivashankar’s speech in Perambalur!

பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் அ.நடராஜன் தலைமையில், மாவட்ட செயலாளர் குன்னம் சி.இராஜேந்திரன் முன்னிலையில் நடந்தது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு மீண்டும் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு,ஒரே ஆளும் கட்சி என்று மாற்றி விடுவார்கள் என்று பேசினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாளை மார்ச் மாதம் முழுவதும் கொண்டாடுவது எனவும், மார்ச் 14 -ம் தேதி பெரம்பலூர் மாவட்டத்திற்கு வருகை தரும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

இந்த கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு பேசுகையில், பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் குன்னம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நூலகம் திறப்பு விழா, அரியலூர் மருத்துவக்கல்லூரி திறப்பு விழா ஆகிய நிகழ்ச்சிகளுக்கு வருகை தரும் மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பாக வரவேற்பு அளிப்பது குறித்தும் பேசினார்.மேலும் மீண்டும் பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் ஒரே நாடு, ஒரே ஆளும் கட்சி என்று மாற்றி விடுவார்கள் ஆகையால் ஒவ்வொரு கிளைக்கழகங்களிலும் பத்து பேர் கொண்ட பூத் கமிட்டி அமைத்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. வெற்றி பெற வேண்டும் என்றும் அமைச்சர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச்செயலாளர் பா.துரைசாமி, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் டாக்டர் செ.வல்லபன், மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் வி.எஸ்.பெரியசாமி, மாவட்ட துணைச் செயலாளர் தழுதாழை பாஸ்கர், சன்.சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டுச்செல்வி ராஜேந்திரன், செ.அண்ணாதுரை, அழகு.நீமேகம், மாவட்ட பொருளாளர் செ.ரவிச்சந்திரன், ஒன்றிய கழக செயலாளர்கள் எம்.ராஜ்குமார், வீ.ஜெகதீசன், எஸ்.நல்லதம்பி, தி.மதியழகன்,
சோமு .மதியழகன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்-நகராட்சி துணைத்தலைவர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர்கள் எ.ரசூல்அகமது, டி.ஆர்.சிவசங்கர், வேப்பந்தட்டை ஒன்றிய பெருந்தலைவர் க.ராமலிங்கம், துணை பெருந்தலைவர் எம்.ரெங்கராஜ், சி.ராஜேந்திரன், பேரூர் கழக செயலாளர்கள் ஆர்.ரவிச்சந்திரன், செல்வலெட்சுமி சேகர்,
மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளர் பாரி (எ) அப்துல் பாரூக், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் கவிஞர். முத்தரசன்,

மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் அ.கருணாநிதி, தொ.மு.ச.கவுண்சில் பேரவை மாவட்ட தலைவர் கே.கே.எம்.குமார், தொ.மு.ச.மாவட்ட கவுண்சில் பேரவை செயலாளர் ஆர்.ரெங்கசாமி, மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் க.ரமேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆர்.முருகேசன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ஆர்.சரவணன், நகர பொருளாளர் பெ. முத்துக்குமார், நகர துணை செயலாளர் எம்.சபியுல்லா, மாவட்ட அறங்காவலர் குழு துணைத் தலைவர் டி.கே.ராமச்சந்திரன்,
மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் எம்.மணிவாசகம், மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஜி.கே.மூர்த்தி, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர்கள் வ.சுப்ரமணியன், ரா.சிவா, மா.பிரபாகரன், நகராட்சி உறுப்பினர்கள் நல்லுசாமி,துரை.காமராஜ், ஒன்றிய குழு உறுப்பினர் பெரு.கருப்பையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திராவிட மாடல் முதல்வர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மாவட்ட, ஒன்றிய,நகர, பேரூர் கழகங்கள் சார்பில் மார்ச் மாதம் முழுவதும் பொதுக்கூட்டங்கள், நலத்திட்ட உதவிகள், போன்றவை நடத்திட வேண்டும் எனவும்,

தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் – கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் , வருகிற 14.03.2023. அன்று பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் பேருந்து நிலையம் திறப்பு விழா மற்றும் நூலகம் திறப்பு விழா ஆகியவற்றில் கலந்து கொள்கிறார். அது சமயம் பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து திரளாகக் கலந்து கொள்வது எனவும், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைக் கழகங்களிலும் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் பத்து பேர் கொண்ட குழு அமைத்திட வேண்டும் என்றும், அந்தப்பட்டியலை மாவட்ட களத்தில் ஒப்படைக்குமாறும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேப்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் சி.ராஜேந்திரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!