If the father questioned how to survive if he got low salary in Perambalur, his son threw up and committed suicide!

பெரம்பலூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெற்றிவேல், இவர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் பேன்சி ஸ்டோர் வைத்து நடத்தி வருகிறார். அவரது மகன் கோவிந்தராஜ் (வயது 23). இவர் பெரம்பலூரில் உள்ள தனியார் லேத் பட்டறையில் வெல்டிங் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், பட்டறையில் இருந்து சம்பளம் வாங்கிய கோவிந்தராஜ், தந்தை வெற்றிவேல் இடம் ரூ. 4 ஆயிரம் கொடுத்துள்ளார். இதை பெற்றுக் கொண்ட தந்தை மகனிடம் இவ்வளவு குறைவாக சம்பாதித்தால் எப்படி திருமணம் செய்தால் குடும்பம் நடத்துவாய் என ஆலோசனை கூறி கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த கோவிந்தராஜ் தந்தையின் பேன்சி கடையில் வந்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற பெரம்பலூர் போலீசார் கோவிந்தராஜுன் உடலைக் கைப்பற்றி பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்தும் விசாரித்து வருகின்றனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!