If the love of predilection, homemade Petrol bomb through on Teachers House in Perambalur !
பெரம்பலூரில் பள்ளி பருவத்தில் ஏற்பட்ட காதலால், ரவுடி பெண்ணின் வீட்டில் வெடிகுண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் புதிய மதன கோபாலபுரம், பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் பட்டதாரி பெண் ஒருவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். நேற்றிரவு பெரம்பலூர் சேர்ந்த ரவுடி செல்வா (எ) நீலகண்டன், இவரது நண்பன் பப்லு (எ) சத்தியமூர்த்தி ஆகிய இருவரும் சென்று பெண்ணின் வீட்டிற்கு 11ம் வகுப்பு படித்த போது ஒரு தலையாக காதலித்தாகவும், தனக்கு திருமணம் செய்து வைக்க கோரி நீலகண்டன் கத்தியை, ஆசிரியை குடும்பத்தாரிடம் காட்டி மிரட்டியதோடு, குவாட்டர் பாட்டிலில் தயாரிக்கப்பட்ட பெட்ரோல் குண்டை வாசலில் வீசினர். அது வெடித்தது. இதில் அங்கிருந்த கணேசனுக்கு சொந்தமான காரின் கண்ணாடியையும் உடைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும், வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கவும், ஏற்பாடு செய்தனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் சம்பவ இடத்திற்கு 5 பேர் பைக்குகளில் வந்தனர். போலீசார் பாதுபாப்பிற்கு நிற்பதை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டனர். தப்பி ஓடிய நபர்களையும், நீலகண்டன், சத்தியமூர்த்தி ஆகியோரை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகண்டன் மீது வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.