பெரம்பலூர் அருகே பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பள்ளி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவரது குடும்பத்தாரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாட்டார் மங்களம் கிராமம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலமுரளிதரன் – ஆனந்தி தம்பதியினரின் இரண்டாவது மகள் சவுந்தர்யா(16), இவர் நக்கச்சேலம் கிராமத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 12ம் வகுப்பு பயில நாளை பள்ளி செல்ல இருந்தார்.
இதனிடையே நன்றாக படித்திட வேண்டும் என பெற்றோர் கண்டித்தாதால் மனமுடைந்த மாணவி கடந்த 29ந்தேதி காலை முதல் திடீரென காணாமல் போன சவுந்தர்யாவை அவரது பெற்றோர் உறவினர்கள் சிலர் உதவியுடன் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்நிலையில் நாட்டார்மங்களத்திலிருந்து செட்டிகுளம் செல்லும் சாலையில் அரங்கசாமி (60) என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சவுந்தர்யா சடலமாக மிதப்பதாக வந்த தகவலின் பேரில் டிஎஸ்பி., கார்த்திக்தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்ற பாடாலூர் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பள்ளி மாணவி சவுந்தர்யாவின் சடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேகொண்டு வருகின்றனர்.