If those who paid money for online trade complain to teacher Venkatesan, action will be taken to recover: Perambalur Police S.P.

பெரம்பலூரில் போலீஸ் எஸ்.பி அலுவலகத்தில், எஸ்.பி ஷ்யமளாதேவி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தன்னுடன் பணியாற்றிய சக டீச்சர் தீபாவை கொடூரமாக கொலை செய்த ஆசிரியர் வெங்கடேசனை பிடித்து, கைது செய்தது குறித்தும், போலீசார் பட்ட சிரமங்கள் குறித்தும், தெரிவித்த அவர், வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மங்களமேடு டி.எஸ்.பி தெ.சீராளன், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் மனோஜ், வினோத்கண்ணன், சங்கர், செந்தமிழ்செல்வி, சரவணக்குமார், சஞ்சீவி, சிவக்குமார், தலைமைக்காவலர் 182 சுரேஷ், கலைமணி, ஆகியோர்களை மத்திய மண்டல காவல்துறை தலைவர் மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் மற்றும் பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆகியோர வெகுவாக பாராட்டினர்.

ஆன்லைன் வர்த்தம் குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த அவர், ஆன் லைன் டிரேடிங் என்பது மோசமான குழியில் தள்ளுவதை போன்றது. அரசு பணியில் இருக்கும் ஆசிரியர்கள் இவர்கள் இருவரும் இந்த வேலையை செய்திருக்க வேண்டியதில்லை. மேலும், ஆசிரியர் வெங்கடேசனிடம், ஆன்லைன் டிரேடிங்கிற்காக பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் அல்லது பாதிக்கப்பட்டவர்கள் எவரேனும் புகார் அளித்தால், பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அண்மைச் செய்திகள்

Join Free Now https://dsmatrimony.com/

Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!