Illegal Liquor Shops; Brutally assaulted journalist with sickle; Perambalur journalists condemn protest!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா செய்தியாளராக பணியாற்றிவரும் நேசபிரபு (31) நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பல் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தியிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

திருப்பூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த மதுபானக்கடைகள் குறித்த விவரங்களை தொலைக்காட்சி செய்திகளின் மூலமாக அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற காரணத்திற்காகவே நேசபிரபு மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாத நபர்கள் தன்னை பின் தொடர்வதாக பலமுறை புகார் அளித்த பின்னரும் எவ்வித பாதுகாப்பு நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினரின் அலட்சியப் போக்கால் பொதுமக்கள் அதிகம் நடமாடும் பெட்ரோல் பங்கில் வைத்து நேசபிரபு மீது மர்ம நபர்கள் சரமாரியாக தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும், கண்டன ஆர்ப்பாட்டங்களும், கட்சித் தலைவர்கள் கண்டனமும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, செய்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த சம்பவத்திற்கு முதலமைச்சர் கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்துள்ளார். மேலும் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிக்கப்படும் என அறிவித்துள்ள அவர், செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன், நேரில் பார்த்து ஆறுதல் கூறுவதோடு, செய்தியாளர் நேசபிரபுவின் மருத்துவ செலவுகளுக்கு ரூ. 3 லட்சத்தை அறிவித்து நடவடிக்கை எடுத்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!