Illegal quarry discovered near Perambalur: Officials take action!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், வெங்கலம் ஊராட்சியில், மேற்கு பகுதியில் உள்ள மலையில் கடந்த 5 ஆண்டுகளாக சட்ட விரோதமாக இயங்கி வந்த கல்குவாரியை பெரம்பலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை இனை இயக்குநர் பெர்னார்டு கண்டறிந்து, பணியில் ஈடுபட்டிருந்த 2 ஹிட்டாச்சி வாகனங்கள் உள்ளிட்ட லாரிகளை பறிமுதல் செய்து, குவாரியை இயக்கி வந்த கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த என்.ஜே.என் நல்லுசாமி என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
இதனிடையே சட்டவிரோத கல்குவாரியில் அரும்பாவூர் போலீசார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.