In a locked house in Perambalur, Rs. Jewelery worth 1 lakh, gas cylinder stolen!

பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை ஏவிஆர் நகரில் பூட்டி இருந்த வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகை பணம் கொள்ளை போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் அருகே உள்ள எசனை கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் மகன் சதீஷ்குமார், இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது தம்பி நவநீதன் (29), கீழக்கணவாய் கிராமத்தில் உள்ள அரசு பாலி டெக்னிக் காலேஜில் விரிவுரையாளராக உள்ளார். தாய் – தந்தையார் காலமானதால், கடந்த ஓர் ஆண்டாக இருவரும் அரணாரையில் உள்ள ஏவிஆர். நகரில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணன் சதீஷ்குமார் என்பவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கடந்த டிச.15 தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால், பகலில் வேலை பார்த்துவிட்டு இரவில் திருச்சி மருத்துவமனையில் உள்ள அண்ணனிடம் சென்றுவிட்டு காலையில் பெரம்பலூர் வந்து பணிக்கு செல்வதுமாக இருந்துள்ளார்.

வழக்கம் போல் நேற்று மாலை பணி முடித்து வந்து வீட்டை பூட்டிவிட்டு திருச்சிக்கு சென்று விட்டு, மீண்டும் இன்று காலை திரும்ப வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் வீட்டினுள் இருந்த பீரோ திறந்த நிலையில் இருப்பதை கண்டு பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில், 2 பவுன் தங்கசெயின், ஒரு கேஸ் சிலிண்டர், ஸ்பீக்கர் ஒன்று என மொத்தம் ரூபாய் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவு போயிருப்பது தெரியவந்தது.

தடய அறிவியல் நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் கொள்ளையர்களை போலீசார் அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!