In a locked house in Perambalur, Rs. Theft worth Rs 1 lakh; Tampering robbers: intensive investigation by the police !
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள கீரீன் சிட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்கமோகன் (44), மின்வாரியத்தில் ஒப்பந்ததாரராக பணி செய்கிறார். இன்று காலை 09.45 மணி அளவில், தனது சொந்த வேலையாக வெளியே சென்றுவிட்டு மீண்டும் மதியம் 1.30 வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் முன் கதவு உள் தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. அவர் சந்தேகமடைந்து பின்பக்க கதவை சென்று பார்த்தபோது தாழ்ப்பாள் உடைக்கப்பட்டு இருந்தது, உள்ளே சென்று பார்த்தபோது படுக்கை அறையில் இருந்த பீரோ, ஹால் அலமாரி ஆகியவற்றில் கலைக்கப்பட்டு கிடந்தது. அதில் வெள்ளி கொலுசு – 3 ஜோடி, வெள்ளி அரைஞாண் கயிறு – 1, காமாட்சி விளக்கு – ஒன்று, வெள்ளி சங்கு – 1, 3 அரை பவுன் காசு, 2 பவுன் மதிப்புள்ள தோடு 3 ஜோடி ஆகியவற்றின் மதிப்பு ஒரு லட்சம் இருக்காலாம் என்று கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த போலீசார், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.