In a private lodge in Perambalur, a Illegal affair couple drank poison mixed with alcohol; Girlfriend death, boyfriend life Serious !!

பெரம்பலூர் தனியார் லாட்ஜில் கள்ளக்காதல் ஜோடி ஒன்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதில் காதலி இறந்த நிலையில் காதலன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜோடி ஒன்று பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் கடந்த 17ம் தேதி அறை எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள், திருச்சி, சமயபுரம் உள்ளிட்ட ஊர்களுக்கும் சென்று வந்தனர். இன்று காலை வெகுநேரம் ஆகியும் அறை திறக்கப்படாததால், லாட்ஜ் ஊழியர்கள் தாழிடப்படாத கதவை திறந்து பார்த்த போது விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்து உள்ளனர். இது குறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பெரம்பலூர் போலீசார் பார்த்ததில் காதலி இறந்து கிடப்பதும், காதலனுக்கு உயிர் இருப்பதும் தெரிய வந்தது. அவர்கள் நடத்திய முதல் கட்ட விசாரணையில், சென்னை கே.கே நகரை சேர்ந்த கேசவன் மகன் மகேந்திரன் (வயது 45), திருமணமானவர். மனைவி குழந்தைகள் சென்னையில் வசித்து வரும் நிலையில் வுட் வேலை செய்து வருவதும், இறந்த போன பெண் திருச்சி மாவட்டம், துறையூர் அருகே எரகுடியை சேர்ந்த பூங்கொடி என்பதும், பூங்கொடி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகாரத்து பெற்ற நிலையில் சென்னையில் உள்ள பிரபல (சரவணபவன்) ஓட்டலில் வேலை செய்து வந்ததும் தெரிய வந்தது. இந்நிலையில் மகேந்திரன் ஓட்டலுக்கு அடிக்கடி சென்று வந்ததில் அங்கு வேலை செய்த பூங்கொடியுடன் பழக்கம் ஏற்பட்டு பின்னர் காதலர்களாக மறி அடிக்கடி பழகி வந்துள்ளனர். பொங்கலுக்காக வீட்டிற்கு வந்த பூங்கொடியுடன் பெரம்பலூரில் மகேந்திரன் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்து கொண்டு ஊர் சுற்றி வந்ததும் தெரியவந்தது. அப்போது இவர்களின் கள்ளக்காதலுக்கு இடையூறாக குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் மதுபானம் வாங்கி அதில் விசத்தை கலந்து குடித்தனர். இதில் பூங்கொடி இறந்து விடவே, மகேந்திரன் உயிருக்கு ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டு வருகிறது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்காதல் ஜோடி மதுபானத்தில் விசம் குடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!