In addition to ration cards, rice will be provided at the rate of 5 kg per 2 months: Perambalur Collector Ventapriya

பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதல் உணவு தேவைக்காக பொது விநியோகத்திட்டத்தின் கீழ் கூடுதல் அரிசி வழங்கப்படவுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கூடுதல் உணவு தேவைக்காக மத்திய அரசின் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013ன் படி பிரதான் மந்திரி காரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அனைத்து அந்தியோதயா அன்னயோஜனாமற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு திட்டத்தின் கீழ் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும் பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் ஜீன் மற்றும் ஜீலை ஆகிய இரண்டு மாதங்களுக்கு விலையில்லாமல் பொது வினியோக திட்ட அரிசியுடன் கூடுதலாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. இதனை அனைத்து ரேசன் அட்டைதாரர்களும் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!