Model

In all districts of the city, causing the demand for construction workers

நாமக்கல்: அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தங்க தமிழ்நாடு கட்டுமான, அமைப்புசாரா, விவசாய தொழி்லாளர்கள் மத்திய சங்க மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் சங்க மாநில தலைவர் பொன்வேல்சாமி தலைமையில் நாமக்கல்லில் நடைபெற்றது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தி்ல் பதிவு செய்துள்ளவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.1,000-த்திலிருந்து ரூ.3,000 மாக உயர்த்தி வழங்க வேண்டும். நலவாரிய பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் நகர பேருந்துகளில் இலவச பயண அனுமதி அட்டை வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிற்பயிற்சி கூடங்களில் கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர்களின் பிரதிநிதியாக கட்டுமான தொழிலாளி ஒருவரை நியமிக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள 32 தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செயல்பாடுகள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். நலவாரிய பதிவிற்கு ஆதார் அட்டை மட்டும் இருந்தால் போதும் என அறிவிக்க வேண்டும்.

நலவாரிய பதிவிற்கு அரசு அதிகாரிகள் சான்று அல்லது கிராம நிர்வாக அலுவலர் சான்று ஏதாவது ஒன்றை மட்டும் நடைமுறையாக்க வேண்டும். வருவாய் வட்டங்கள் தோறும் தொழிலாளர் நலவாரிய அலுவலகங்களை அமைக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் கட்டுமான தொழிலாளர்கள் நகரை ஏற்படுத்தி தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும்.

கட்டுமான தொழிலாளர்களுக்கு தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான கூலி வழங்க சட்டம் இயற்றிட வேண்டும். மேலும் ஆண்டுதோறும் கூலி உயர்வினை முறையாக அறிவித்திட வேண்டும். ஈஸ்ஐ மருத்துவ திட்டத்தின் கீழ் பதிவுபெற்ற கட்டுமான,அமைப்பு சாரா தொழிலாளர்களையும் இணைக்க வேண்டும்.

தமிழக கட்டுமான, அமைப்புசார தொழிலாளர் நலத்துறை என தனித்துறை ஏற்படுத்தி அதற்கு தனி அமைச்சரை நியமிக்க வேண்டும். இந்து சமய அறநிலையத்துறைகளின் கீழ் உள்ள கோயில்களில் கட்டுமான தொழிலாளர்களின் பிரதிநிதியாக கூடுதலாக ஒருவரை சேர்க்க வேண்டும். கட்டுமான தொழிலாளர்களின் பிரதிநிதியாக சட்டப்பேரவையில் நியமன உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும்.தமிழகத்தில் சட்ட மேலவையை மீண்டும் ஏற்படுத்திட வேண்டும்.

கஜா புயலால் வீடுகளை இழந்த மக்களுக்கு உடனடியாக அரசு செலவில் வீடு கட்டிக்கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள காலிப்பணியடங்களை நல வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட தொழிலாளர்களின் குழந்தைகளில் தகுதியானவர்களை கொண்டு நிரப்ப வேண்டும்.

மணல் குவாரிகளை அதிக எண்ணிக்கையில் திறந்து 3 யூனிட் மணல் ரூ.20,000-க்கி கிடைத்திட நடவடிக்கையெடுக்க வேண்டும். கட்டுமான மூலப் பொருட்களான மணல், சிமென்ட், கம்பி, பெயிண்ட், மரம் போன்ற பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும். கட்டுமான, உடலுழைப்பு உள்ளிட்ட அனைத்து நல நல வாரியங்களுக்கும் உறுப்பினர், தலைவர் பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகளை நியமிக்க வேண்டும்.
மாநில பொதுச்செயலர் பெருமாள், பொருளாளர் கதிர்வேல், நாமக்கல் மாவட்ட செயலர் கந்தசாமி, தலைவர் விஜயா துரைராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!