In building the road, the public protested to the authorities themselves: Not to me! – Minister explanation!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட ஆலத்தூர், வேப்பூர் ஒன்றியங்களில் சுமார் 11.5 கோடி ரூபாய் மதிப்பில், திட்ட பணிகளை நேற்று தமிழ்நாடு போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

அவர் கரம்பியம் கிராமத்திற்கு அடுத்தபடியாக நேற்று குன்னம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூ. 1 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பில் ஆசிரியர்களுக்கான கழிவறையும், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் சைக்கிள் நிறுத்தும் கொட்டகை அமைக்கும் பணியையும், காலனி தெருவில் ரூ.16.04 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியையும், காலனி வடக்குக் தெருவில் ரூ. 13.16 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்ட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பூமி பூஜை போடும் இடத்திற்கு முன்னதாகவே கலெக்டர் கற்பகம் மற்றும் திட்ட அலுவலர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் வந்திருந்தனர். அங்கிருந்த பொதுமக்கள் ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் லலிதா-விடம் அப்பகுதி மக்கள் தார்சாலையாக இருந்ததை சிமெண்ட் சாலையாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது காரை விட்டு இறங்கிய அமைச்சர் சிவசங்கருக்கு உள்ளூர் கட்சி பிரமுகர்கள் சால்வை அணிவித்து வரவேற்பு கொடுத்து கொண்டிருந்தனர்.
பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், பூமி பூஜை நடக்கும் இடத்தில் இருந்து கலெக்டர் கற்பகம், ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் அங்கிருந்து வெளியே வந்தனர்.

அமைச்சரிடமும் பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தாகவும், அதற்கு தான், மக்கள் விருப்பப்படி மாற்றி டெண்டர் விட்டு பணியை துவக்கி வைக்கலாம் என்று சொல்லி விட்டு தான் வந்தேன் என்றும், மக்கள் எதிர்ப்பு தெரிவித்தது அதிகாரிகளுக்கு தான். எனக்கல்ல என்றும் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

ஊரக வளர்ச்சி துறை திட்ட அலுவலர் லலிதா உள்ளிட்ட அதிகாரிகள் முறையாக திட்டமிட்டு, களப்பணி செய்யாததே இதற்கு காரணம் என தெரிய வருகிறது.

சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்ட வந்த அமைச்சருக்கு சொந்த தொகுதி மக்கள் எதிர்ப்பு; திரும்பி சென்றார்!

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!