In case of death of income earner due to corona infection, loan to improve the family: Perambalur Collector!

பெரம்பலூர் கலெக்டர் வெங்கட பிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
கொரோனா வைரஸ் பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் உயிரிழந்திருப்பின் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ஸ்மைல் என்ற கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
அதிகப்பட்சமாக திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்க வேண்டும். திட்டத் தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் கடன் தொகை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர் கொரோனா வைரசால் உயிரிழந்ததற்கான ஆவணங்களுடன்; மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துளளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!