In government schools, the breakfast program – a trial run; Perambalur Collector Inspection!
தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் படிப்பினை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும், வருகையினை அதிகரிக்கவும், வேலைகளுக்கு செல்லும் தாய்மார்களின் பணிச் சுமையினை குறைப்பதற்கும் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு திட்டமான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் வருகின்ற 15ஆம் தேதி அன்று மதுரையில் தொடங்கி வைக்க உள்ளார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த காலை உணவு திட்டம் சிறப்பாக செயல்படுத்துவது குறித்த சோதனை முயற்சி நடைபெற்றது. பெரம்பலூர் நகராட்சி முத்து நகர் அரசு தொடக்கப் பள்ளியில் நவீன சமையல் கூடத்தில் 3 பள்ளிகளுக்கான உணவுகள் தயாரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும். அதன்படி வியாழக் கிழமைக்கான உணவான வரகு பொங்கலுடன் காய்கறி சாம்பார் தயார் செய்யப்பட்டு மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டதை கலெக்டர் சாப்பிட்டு பார்த்து சோதனை செய்தார்.
விளம்பரம்:
முத்து நகர் அரசு பள்ளியிலிருந்து மேலும் இரண்டு பள்ளிகளுக்கு எடுத்துச் சென்று விநியோகிக்கப்படுவதை அந்த இரண்டு பள்ளிகளுக்கும் நேரில் சென்று பார்வையிட்டு மாணவர்களிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார். மேலும் இத்திட்டம் இன்று ஒரு நாள் சோதனை முயற்சியாக மட்டுமே செயல்படுத்தப்பட்டது என்றும் வருகின்ற 15ஆம் தேதி முதல் தொடர்ந்து அமல்படுத்தப்படும் எனவும் காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளியில் சுவையான விதவிதமான உணவுகள் வழங்கப்படும் என மாணவர்களிடம் தெரிவித்தார். பெரம்பலூர் நகராட்சி ஆணையாளர் (பொ) மனோகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
விளம்பரம்: