In grant, beekeeping, onion storage shed oyster shelling room : Perambalur Collector Info!

தேசிய தோட்டக்கலை இயக்கத் திட்ட செயலாக்கத்திற்கு பெரம்பலூர் மாவட்டத்திற்கு 2024-25 ஆம் நிதியாண்டில் உத்தேச பொருள் இலக்கீடாக 2415 எண்கள்/எக்டர் மற்றும் நிதி இலக்கீடாக ரூ.456.799 லட்சம் பெறப்பட்டுள்ளது. விவசாயிகள் பயனடையும் வகையில் பரப்பு விரிவாக்க இனத்தின் கீழ் வெங்காய விதைகள், காய்கறி நாற்றுகள், பூக்கள் மற்றும் பழக்கன்றுகள் போன்றவை வழங்கப்பட உள்ளன. மேலும், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக நீர் சேகரிப்பு அமைப்பு, வீரிய ரக காய்கறி சாகுபடியை ஊக்குவிக்க நிழல் வலைக்குடில், நிலப்போர்வை போன்றவை 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளன.

தேனீப் பெட்டிகள், தேனீக்கள் மற்றும் தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. அங்கக வேளாண்மை முறையில் தோட்டக்கலைப்பயிர்கள் பயிரிடும் விவசாயிகளுக்கு மானியத்தில் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. விவசாயிகளின் வயலில் விளையும் விளைபொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்கவும் வெங்காய சாகுபடி செய்யும் விவசாயிகள் அறுவடைக்கு பின்பு சேமித்து வைப்பதற்காக 25.00 மெ.டன் (1 யூனிட்) கொண்ட குறைந்த செலவிலான வெங்காய சேமிப்பு அமைப்பு அமைக்கவும் 50% மானியம் வழங்க இலக்கு பெறப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்களது நிலத்திற்கான சிட்டா, அடங்கல், நில வரைபடம், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2, வங்கி கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களை கொண்டு சம்மந்தப்பட்ட வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகம் மூலமாகவோ அல்லது விவசாயிகள் தாங்களாகவே www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் க.கற்பகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2024 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!