In life, if you try, nothing is impossible, if you try, you will be successful, said at the Perambalur Graduate-Post Graduate Teacher Association function, International Businessman DATO S PRAKADEESH KUMAR Speaks!

பெரம்பலூரில் பட்டதாரி – முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் 49 ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா மற்றும் பாராட்டு விழா சுந்தரபாண்டியன் தலைமையில் நடந்தது. மாவட்ட செயலாளர் அருண்குமார், மாவட்ட பொருளாளர் இலக்கியசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக பன்னாட்டு தொழிலதிபர் பிளஸ் மேக்ஸ் குரூப் ஆப் கம்பெனி டத்தோ பிரகதீஸ்குமார் கலந்துகொண்டு, பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள், 100% தேர்ச்சி விழுக்காடு பெற்று தந்த ஆசிரியர்கள் மற்றும் 100% தேர்ச்சி விழுக்காடு பெற்றுதந்த தலைமையாசிரியர்கள், 2022-2023 கல்வியாண்டில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஆகியோர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.

முன்னதாக மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கா அவர் பேசியதாவது: நான் பெரம்பலூர் மாவட்டத்தில பூலாம்பாடியில் பிறந்து, . அரசு பள்ளியில் படித்தவன் தான். சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த நான், காலையில சாணி அல்றது. அப்புறம் தான் ஸ்கூல் போவோம்.. ஈவினிங் வந்து வயலில் தண்ணி கட்றது. மலேசியாவுக்கு வேலைக்கு போகும் போது ஒரு கார் கம்பெனிக்கு நான் ஒரு இன்ஜினியராக தான் வேலைக்கு போனேன்‌ அங்க 3 மாசத்துல ஒரு சின்ன ஆக்சிடென்ட். இந்தியாவுக்கு திரும்பி போகிற நிலைமைல இருந்தப்ப 3 வருட வொர்க்கிங் காண்ட்ராக்ட்டை முடிச்சிட்டு தான் போகணும்னு சொல்லிட்டாங்க. அங்க அங்கிள் ஒருத்தர் இருந்தாரு, அவரிடம் இந்தியாவுக்கு போவதாக தெரிவித்த போது, ஏன் என் கம்பெனில வேலை செய்யக்கூடாது என்று கேட்டார். ஓகே அப்படின்னு சொல்லிட்டு அவரு கம்பனியில் ஜாயின் பண்ணிட்டேன். அங்க ஆறு மாசம் வேலை செய்தேன். மீண்டும் சிரமத்தால், இந்தியாவுக்கு போயிட்டு அங்கே ஏதாவது வேலை செஞ்சு பொழைச்சுக்குறேன் அவரிடம் தெரிவித்தேன். இங்கே இருந்து ஏதாவது பொழைக்கிறதுக்கு ஐடியா இல்லையா என கேட்டாரு.

நான் ஏதாவது பிசினஸ் பண்ணலாம்னு இருக்கேன் அப்படின்னு சொன்னேன். அவர் என்ன பிசினஸ் என்று கேட்டார் நான் டூட்டி பிரி, ஷாப் வைக்கலாம்னு இருக்கேன் ஆனாலும், போட்டி அதிகம் தான் நம்முடையதும் பத்தோட பதினோரு, கம்பெனியா இருக்கும் அப்படின்னு சொன்னேன். அதற்கு அங்கிள் என்னுடைய ஷாப் ஒன்னு இருக்கு அதை நீ வைத்துக் கொள் என சொன்னாரு. அந்த அளவுக்கு என்கிட்ட காசு இல்லைங்க அவர்கிட்ட சொன்னேன். அந்த நிலைமையிலும் 2 கோடி ரூபாய் கடன் வாங்கி கொடுத்தேன். ஊரில் என் அப்பாவிடம் சின்னப் பையனை நம்பி இவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்று சொன்னார்கள். மாதமாதம் அந்த கடைக்கு பணம் கட்ட வேண்டும். அதோடு 3 மாதத்தில் அந்த கடையின் லைசென்ஸ் ரினிவல் பண்ண முடியாத நிலை ஏற்பட்டது. எனக்கு பிசினஸ்ன்னா என்னவென்று தெரியாது, அந்த நாட்டு மொழியும் தெரியாது. யாரைப் போய் பார்ப்பது? தெரியவில்லை. என்னிடம் இறக்குமதி லைசென்ஸ் இருந்தது. அதை வைத்து பிசினஸ் செய்தேன். அதலிலும் பல சிரமங்கள் ஏற்பட்டு, தற்கொலைக்கு செய்யும் அளவிற்கு நிலைமை மோசமானது. கையில் இருந்த பணமும் காலியாக நிலையில் சிரமமப்பட்டேன். பின்னர். 300 காட்டன் கம்பளிகளை வாங்கினேன். அதற்கு 18 ஆயிரம் ரிங்கிட்டிற்கு 6 ஆயிரம் ரிங்கிட்டு கொடுத்தது கொள்முதல் செய்தேன். அடுத்த சோதனையாக, எங்கள சரக்கிற்கு பணம் தராமல் ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டதோடு, மிரட்டியது. அதோடு 5 லாரிகளின் டிரைவர்களில் ஒருவரையும் சுட்டுவிட்டனர். அங்கிருந்த அரசு மருத்துவமனைியில் 20 நாட்கள் சிகிச்சை பெற்றேன். பின்னர். கையில் இருந்த காசும் தீர்ந்து விட்டது. வீட்டில் அப்பா கடன் வாங்கி கொடுத்துள்ளார். மலேசிய அங்கிள் மற்றும் வெளி வட்டத்தில் கடன் தரவேண்டி இருந்தது. சூழ்நிலை மோசமானதாக இருந்தது. அதில் இருந்து மீள முடியால் தற்கொலைக்கு செய்யும் நிலைக்கு தள்ளப்பட்ட போது. இன்சூரன்ஸ் செய்து விட்டு இறந்தால், கிடைக்கும் பணம் வாரிசுதாருர்களாக நியமனம் செய்யப்பட்ட கடன்தாரர்கள் பெற்றுக் கொள்வார்கள் என எண்ணி இருந்த போது. இன்சூரன்ஷ் ஒரு வருடம் கழித்துதான் அதுமாதிரி கிடைக்கும் என ஏஜன்ட் தெரிவித்தார். கையில் இருந்த கொஞ்ச நஞ்சமும் காலியாகி விட்டது.அப்போது என்னுடன் பணிபுரிந்த ஆனந்த் என்பவர் இரவு வேளையில் சாப்பாடு வாங்கி கொடுப்பார். தெரியாத ஊரில், மிகவும் சிரமப்பட்டேன். ஒர மாதத்திற்கு பிறகு கைவசம் இருந்த இறக்குமதி லைசென்சை வைத்து பிசினசை தொடங்கினேன். முதல் 6 ஆறுமாதங்கள் சிரமப்பட்டு நல்ல லாபத்தை அடைந்தேன். பிறகு, கடன் வாங்ககூடாது, பிறகு உதவவேண்டும் அதனால்தான் முன்னேற முடியும் என்பதை உணர்ந்து தொடர்ந்து செயல்பட்டேன். என்னை சிரமப்படுவர்களுக்கு, உதவி என வந்தவர்களுக்கு என்னால் முடிந்ததை அனைத்தும் செய்து வருகிறேன். இன்று பல தொழில்கள் செய்கிறேன். கோடிகணக்கில் தொடர்ந்து ஈட்டிவருகிறேன். பல நிறுவனங்கள் நடத்தீ வருகிறேன். என்னர் 5 ஆயிரம் குடும்பங்கள் பயன் பெறுகின்றன. எனவே, மாணவர்கள் ஆகிய நீங்களும், விடாமுயற்சியுடன் படித்து என்னை முன்னேற வேண்டும், வாழ்க்கையில் முயற்சி செய்தால் முடியாதது ஒன்றுமில்லை, முயற்சித்தால் வெற்றி நிச்சயம் என பேசினார்.

தொடர்ந்து மாநில சிறப்பு தலைவர் சுப்ரமணியன், மாநில தலைவர் மகேந்திரன், மாநில பொதுசெயலாளர் சுந்தரமூர்த்தி, மாநில பொருளாளர் துரைராஜ், கவுரவ தலைவர் பாபுவாணன், முன்னாள் மாநில துணை தலைவர் தங்கராஜ் ஆகியோர் பேசினர். இதில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் மற்றும் முதுநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக மகளிரணி செயலாளர் ஜெயந்தி வரவேற்றர். மாவட்ட இணை செயலாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!