In life, prosperity, health and success of the Year Blossom, Ugadi New Year: IJK President Ravi Paccamuthu Greetings!

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து விடுத்துள்ள யுகாதி வாழ்த்து செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
வாழ்வில் வளம், நலம் மற்றும் வெற்றிகளை வழங்கும் ஆண்டாக யுகாதி புத்தாண்டு மலரட்டும் என்று இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
யுகாதி என்றால் யுகத்தின் ஆரம்பம் என்று பொருள். யுகாதி பண்டிகை அன்று தான் பிரம்மா உலகை படைத்ததாக கூறுவார்கள்.
வசந்த காலத்தின் பிறப்பாக கொண்டாடப்படும் யுகாதி திருநாள் புதிய வேலை,கல்வி, தொழில் போன்றவற்றை தொடங்குவது சாலச் சிறந்ததாக முன்னோர்கள் கூறுவார்கள்.
தமிழ்நாட்டில் வாழும் தெலுங்கு மற்றும் கன்னட மக்களுக்கு இனிய யுகாதி திருநாள் வாழ்த்துக்கள்.
இத்திருநாளில் சுற்றுச்சூழலை பாதுகாத்து, பசுமை செழிக்க நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.
தமிழ்நாட்டில் தமிழர்கள் தெலுங்கர்கள் சகோதர சகோதரிகளாக, அவர்தம் இன்ப துன்பங்களில் பங்கேற்று தொழில், வணிகம், கல்வி, கலை போன்ற பல்வேறு துறைகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு ஒற்றுமையுடன் வாழ்ந்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
மலரும் புத்தாண்டில் வாழ்வில் வளம், நலம் மற்றும் வெற்றிகளை வழங்கும் ஆண்டாக இந்த யுகாதி புத்தாண்டு மலரட்டும். யுகாதி வாழ்த்துக்கள், என தெரிவித்துள்ளார்.