In Namakkal District, the best female functional self-help group can apply for the award

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு :

நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் சிறந்த முறையில் செயல்பட்டு வரும் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு மற்றும் சுய உதவி குழு விருதுகள் தமிழக அரசால் 2017-18 ம் நிதியாண்டிற்கு மாநில மற்றும் மாவட்ட அளவில் விருது வழங்கப்படவுள்ளது. எனவே வட்டாரங்களில் சிறப்பாக செயல்படும் கூட்டமைப்புகளும், குழுக்களும் வரும் 10ம் தேதிக்குள் தங்கள் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் குழுவின் கருத்துருக்களை சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வழங்கவேண்டும்.

விருதுக்கான அடிப்படை தகுதிகள்: கூட்டமைப்பு சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு இரண்டு வருடம் முடிந்திருக்க வேண்டும். பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து மகளிர் திட்ட குழுக்களையும் இணைத்திருக்க வேண்டும். ஆண்டிற்கு குறைந்தபட்சம் 20 கூட்டம் நடத்தி இருக்க வேண்டும். சுய உதவிக்குழு ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடம் முடித்திருக்கவேண்டும். இரண்டாவது தரமதிப்பீடு முடித்திருக்க வேண்டும்.

சுழற்சி முறையில் நிர்வாகிகள் இரண்டு முறை மாற்றம் செய்திருக்க வேண்டும். மூன்று முறை வங்கி கடன் பெற்றிருக்க வேண்டும். கடனை சிறந்த முறையில் திரும்பி செலுத்தியிருக்க வேண்டும். சமூக மற்றும் சமுதாய பணிகள் மேற்கொள்ளுதல், பதிவேடு பராமரித்தல், பெறப்பட்ட பயிற்சிகள், சமுதாய பயிற்றுநர் இருத்தல், உறுப்பினர்கள் தொழில் செய்தல், சந்தைப்படுத்துதல், கூட்டமைப்பு, அங்கீகாரம், கூட்டமைப்பு பெருங்கடன், உள்ளாட்சி தேர்தலில் பங்கேற்ற விபரம் எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்

Tags:

Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!