In Namakkal, more than 80 people from AIADMK joined the DMK.
நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம் அதிமுகவைச் சேர்ந்த 80 க்கும் மேற்பட்டோர் திமுக மாவட்டபொறுப்பாளர் காந்திசெல்வன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
நாமக்கல் கிழக்கு மாவட்டம், புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியம், களங்கானி ரயில்வேகேட் பெரிய காலனியை சேர்ந்த ராஜா, முத்துசாமி, மணி, புஷ்பராஜ், சீனிவாசன், பன்னீர்செல்வம், வேல்முருகன், வெங்கடாசலம், தாயம்மாள், சம்பூர்ணம், குணசேகரன், கவிதா, ரமேஷ், சிவா, முத்துகுமார், ராஜூ, சாந்தி, உட்பட 80 க்கும் மேற்பட்டவர்கள் அதிமுகவில் இருந்து விலகி புதுச்சத்திரம் தெற்கு ஒன்றியச்செயலாளர் துரை தலைமையில் மாவட்ட பொறுப்பாளர் காந்திசெல்வன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
இந்நிகழ்ச்சியில் திமுக புதுச்சத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் கவுதம், ராமசந்திரன்,வாசு, வெங்கடாசலம், அண்ணாதுரை, ரங்கசாமி, ஒன்றியநிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.