In Namakkal, the Quiz Competition for the post office of the post tomorrow
நாமக்கல்லில் நாளை அஞ்சல் துறை சார்பில் வினாடி-வினா போட்டிகள் நடைபெறுகிறது.
மகாத்மா காந்தி 150 வது பிறந்தநாள் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்திய அஞ்சல் துறையின் சார்பாக விநாடி வினா போட்டி நடைபெறவுள்ளது.
கோட்ட அளவிலான விநாடி வினா எழுத்துத் தேர்வு நாளை (3 ம் தேதி) நாமக்கல் கந்தசாமி கண்டர் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. ஒரு பள்ளியில் இருந்து 2 பேர் கொண்ட ஒரு அணி (6 ம் வகுப்பு முதல் 9 ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும்) கலந்துகொள்ளலாம்.
போட்டியில் வெற்றி பெறும் அணியினர் 17ம் தேதி அன்று நடைபெறவுள்ள மண்டல அளவிலான விநாடி வினா போட்டிக்கும், அதில் வெற்றி பெறும் அணியினர் 31 ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் தமிழ்நாடு வட்ட அளவிலான போட்டிக்கும் தகுதி பெறுவர். போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.