In Namakkal, Village Administrative Officers demonstrated their demands
நாமக்கல்லில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நாமக்கல் பார்க் ரோட்டில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் இ–அடங்கல் பதிவேற்றம் செய்ய லேப்டாப் மற்றும் இன்டர்நெட் வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். கூடுதல் பொறுப்பு கிராமங்களுக்கு கூடுதலாக பொறுப்பூதியம் வழங்க வேண்டும்.
ஒரே அரசாணையில் மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் வட்ட செயலாளர் பிரகாஷ், வட்ட தலைவர்கள் செந்தில்கண்ணன், அன்புராஜ், மகளிர் அணி செயலாளர் தமிழரசி உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். முடிவில் வட்ட பொருளாளர் ராமன் நன்றி கூறினார்.