In Perambalur, 663 cases were settled by Lok Adalat

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற, தேசிய மற்றும் தமிழ் நாடு மாநில சட்ட பணிகள் ஆணை குழுக்களின் வழிகாட்டுதலின் பேரில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் 08.02.2020 அன்று தேசிய மக்கள் நீதிமன்றம், பெரம்பலூர் மக்கள் நீதிமன்றங்களில் நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர், மாவட்ட நீதிபதியுமான கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. தலைமை நீதித்துறை நடுவர் எஸ்.கிரி, மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு செயலர் மற்றும் சார்பு நீதிபதி எம். வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், நீதித்துறை நடுவர்கள் அசோக் பிரசாத், ப.கருப்பசாமி மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜகோபால், மணிவேல், கண்ணையன் ஆகியோர் கொண்ட அமர்வானது பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளையும் தேசிய மையமாக்கப்பட்ட வங்கிகளிலுள்ள நிலுவையில் உள்ள வாரா கடன் பொறுத்த வழக்குகளையஜம் விசாரித்து தீர்வு வழங்கியது. 146 வங்கி வழக்குகளில் ரூ.67,33,009- ம், 42 மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் ரூ.1,68,80,000-க்கும் தீர்வு காணப்பட்டது.

7 சிவில் வழக்குகளில் ரூ.29 லட்சத்து ,69 ஆயிரத்து 39ம், 468 சிறு குற்ற வழக்குகளில் ரூ1 லட்தத்து ,55 ஆயிரத்து 50-ம் ஆக மொத்தம் 663 வர்க்குகளில் ரூ.2கோடியே 67 லட்சத்து 37 ஆயிரத்து 198-க்கு தீர்வு காணப்பட்டது.

இந்த மக்கள் நீதிமன்ற நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் இ.வள்ளுவன்நம்பி, திருநாவுக்கரசு, மணிவண்ணன், முகமது இலியாஸ், இளவரசன், துரை.பெரியசாமி, கோவிந்தராஜு, ஆர்.மணிவண்ணன், புகழேந்தி, சுகுமாறன், ராஜேந்திரன், ராமகிருஷ்ணன், மற்றும் வழக்கறிஞர்கள், வருவாய்த் துறையினர், காவல் துறையினர், நீதிமன்ற ஊழியர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். மக்கள் நீதிமன்ற ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலர்கள் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் செய்திருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!