தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடைபெற்ற குரூப் 2ஏ க்கான தேர்வில் 7,266 பேர்கள் தேர்வு எழுதினர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் இன்று தொகுதி-2 ஏ க்கான தேர்வு நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்டம் முழுவதும் 12 மையங்கள் தேர்வுச் செய்யப்பட்டு, மொத்தம் 9,482 நபர்கள் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததில், இன்று நடைபெற்ற தேர்வில் 7,266 நபர்கள் எழுதினார்கள்.
இது 76.6 சதவீதமாகும்.. இத்தேர்விற்கு 6 மொபைல் யூனிட்டும், 3 பறக்கும் படைகளும் அமைக்கப்பட்டு, தேர்வினை கண்கானித்தனர். தேர்வு நடைபெறும் அனைத்து மையங்களுக்கும் சிறப்பு பேருந்து வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டிருந்தது.