In Perambalur, a drunken man dies during treatment! Died at birthday
பெரம்பலூர் 12 வது வார்டு நேரு தெருவில் வசிக்கும் செல்வராஜ் மகன் அரவிந்த் ( வயது 21 ) என்பவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும் கடந்த 2 ஆம் தேதி குடிப்பழக்க போதையினால் தன் வீட்டருகே உள்ள மாரியம்மன் கோவில் அருகே, தானே தவறிக் கீழே விழுந்து தலையில் அடிபட்பட்டது. அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய இடங்களில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பிப்.4 ந் தேதி தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை 4.30 மணியளவில் சிகிச்சையின் போது இறந்துவிட்டார். இவருக்கு ஏற்கனவே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தலையில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். மேலும், பிறந்த நாளிலேயே வாலிபர் போதையால் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.