In Perambalur, a man was arrested for possessing banned gutka.

பெரம்பலூர் நகரில், தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில், நடத்திய விசாரணையில், பெரம்பலூர் ஆத்தூர் சாலையில் உள்ள ஜமாலியா நகரில், வாலிபர் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி விற்பனை செய்து வருவதை கண்டுபிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 103 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவரிடம் நடத்திய விசாரணையில் ராஜஸ்தான் மாநிலம், ஜாட்வாலை சேர்ந்த கிஷோர்சிங் மகன் கான்சிங் என்பதும், அதே பகுதியை சேர்ந்த குழந்தைவேல் மகன் யோகராஜ் என்பவரது வீட்டை வாடகைக்கு எடுத்து 2 மாதங்களாக தங்கி இருந்ததும் தெரியவந்தது. பின்னர், நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர். பெரம்பலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெளிமாநிலத்தவர்கள் பணத்திற்காக தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பொருட்களை விற்பனையில் சங்கித் தொடராக ஈடுபட்டு வருவதும் தெரியவந்துள்ளது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!