In Perambalur, a public petition to stop the rill invasion attempt
பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் நான்கு ரோடு அருகே உள்ள சிலோன் காலணிக்கு பின்புறம் உள்ள ஓடையை தனிநபர்கள் அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள், அதனை தடுத்து நிறுத்தக் கோரி அப்பகுதி மக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் வந்து அங்கிருந்த டி.ஆர்.ஓ. ராஜேந்திரன் இடம், மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர், கலைந்து சென்றனர்.