In Perambalur, a woman was found sprinkling chili powder with 5 pounds of jewelery and Rs. 1 lakh theft in Real Estate office!

பெரம்பலூர் அருகே உள்ள கோனேரிபாளையம் கிராமத்தை சேர்ந்த சத்தியராஜ் (32). கோனேரிப்பாளையம் 4 ரோடு பகுதியில் இட்லி கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு சத்யராஜ் மனைவி வைத்தீஸ்வரி மட்டும், வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு தன் கணவர்தான் வந்துவிட்டதாக நினைத்து கதவை திறந்து வெளியே வந்து எட்டிப் பார்த்தார். அங்கு முகத்தை துணியால் மூடிய மர்ம நபர், வைத்தீஸ்வரி மீது மிளகாய் பொடியை தூவி அவர் கழுத்தில் அணிந்திருந்த 4 3/4 பவுன் தாலிக் கொடியை பறித்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது போன்று, பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் ராஜகோபால் மகன் செல்வம்(39), காய்கறி கடையும், சாமியப்பா நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி விஜயலட்சுமி (32) ரியல் எஸ்டேட் ஆபீசும், மீராமொய்தீன் மகன் சமீர் (22) மளிகை கடையும், அருகே உள்ள ரேசன் கடை உள்ளது. இவற்றின் பூட்டுக்கள் உடைக்கபட்டு கிடந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், ரியல் எஸ்டேட் ஆபிசில் மட்டும் இருந்து ரொக்கம் ரூ. 1 லட்சம் கொள்ளை போனது தெரியவந்தது. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் சி.சி.டி.வி கேமரா உதவியுடளும் இரு கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையர்களை அடையாளம் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இச்சம்பவம் உழவர் சந்தைபகுதியில் காய்கறி வந்த மக்களும், அப்பகுதியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!