In Perambalur, Abhishekam to Navagraha Murthys including Guru Bhagavan on the occasion of Guru Pairchi Festival!
பெரம்பலூர்: அகிலாண்டேஸ்வரி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளி அருள் பாலிக்கும் ஸ்ரீதட்சிணாமூர்த்தி மற்றும் நவகிரக தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கும் குரு பகவான் மற்றும் அனைத்து நவக்கிரக மூர்த்திகளுக்கும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு, மாலை 3:30 மணியளவில் யாகசாலை பூஜைகள் செய்து கடங்கள் புறப்பாடு நடந்தது.
பால், தயிர், சந்தனம், பழ வகைகள் வாசனை திரவியங்கள் உடன் சிறப்பு அபிஷேகம் முடித்து மங்கள வாத்தியம் முழங்க மகா தீபாராதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பூஜைகளை திருச்செங்கோடு சதீஷ் சிவாச்சாரியார் கவுரி சங்க சிவாச்சாரியார் செய்து வைத்தனர்.
பெரம்பலூர் தர்மபரி பாலன சங்கம் விழாவிற்கான உபயம் செய்திருந்தது. முன்னாள் தர்மகர்த்தா வைத்தீஸ்வரன் மற்றும் ராஜமாணிக்கம், ராஜேந்திரன் உள்ளிட்ட திரளான சிவ பக்தர்கள் கலந்து கொண்டு பரிகார பூஜைகளை செய்து குருவை வழிபட்டனர்.