In Perambalur, additional directorial research for non-cost special projects on behalf of non-cost welfare schemes

பெரம்பலூர் மாவட்டத்தில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா நலத்திட்டங்கள் சார்பான ஆய்வுக் கூட்டம் பெரம்பலூர் முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினி சார்பான களப்பணி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் சிறப்பு திட்டங்களின் கூடுதல் இயக்குநர் எல்.ராஜா பள்ளி மற்றும் கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி உங்களுக்கு பயன்பாடு உடையதாக இருக்கிறதா? எந்த வகையில் பயன்பாடாக இருக்கிறது.

இன்னும் மடிக்கணினியை தொழில்நுட்பரீதியில் எவ்வாறு மேம்படுத்துவது என்பது போன்ற பல்வேறு கருத்துக்களை மாணவ – மாணவிகளிடம் கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட கூடுதல் ஆட்சியர் ச.மனோகரன், முதன்மைக்கல்வி அலுவலர் கு.அருளரங்கன், பெரம்பலூர் மாவட்டக் கல்வி அலுவலர் பெ.அம்பிகாபதி, வேப்பூர் மாவட்டக் கல்வி அலுவலர் ப.செந்தமிழ்செல்வி,

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி உதவித் திட்ட அலுவலர் நல்லுசாமி, பள்ளித் தலைமையாசிரியர்கள், கீழக்கணவாய் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர், ஊரக வளர்ச்சி முகமை அலுவலர் கண்ணணன் மற்றும் மாணவ – மாணவிகள், நேர்முக உதவியாளர் சிதம்பரம் மற்றும் இராசேந்திரன் ஆகியோர் ஆய்வில் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!