In Perambalur, advocate association boycotted court work to condemn the central government’s law amendment!
மத்திய அரசு முப்பெரும் சட்டங்களில் திருத்தம் செய்ததை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தி இன்று காலை மாவட்டத் தலைவர் செந்தாமரைக்கண்ணன் தலைமையில் பொதுக் குழு கூட்டம் நடந்தது.
அதில், மத்திய அரசு யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் தன்னிச்சையாக முடிவு செய்து சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது, இதனை திரும்ப பெற வேண்டும், என்பதை வலியுறுத்தி இன்றும், வரும் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய மூன்று நாட்கள் வழக்கறிஞர்கள் பெரம்பலூர் வேப்பந்தட்டை குன்னம் ஆகிய நீதிமன்றங்களில் பணி புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானம் செய்து இன்று முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.